பிரதமர் பதவியை ஏற்க அறிவித்தபோது தப்பியோடியது யார்? ரணில் கேள்வி

நாட்டில் பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார் பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கேள்வியெழுப்பியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாசார நிலையத்தில் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை.ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம்.அமைச்சர்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

இதனால் தற்போது எம்மால் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது. 2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும் அப்போது ஓடி ஒழிந்தார் என இதன்போது ஜனாதிபதி மேலும் தொிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply