பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து சேக் ஹசீனா விலகி நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா சியாவை விடுவிக்கும் உத்தரவை பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் விடுத்துள்ளார்.
காலிதா சியா பிரதமர் பதவியில் அமர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, பெரும்பாலும் பிரித்தானியாவில் அடைக்கலம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பங்களாதேஷின் நெருக்கடி குறித்து நேற்று இந்தியாவில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு இந்திய பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, ரோவின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.