ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்க திட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனிப்பட்ட காரணங்களுக்காக 2024 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என கட்சிக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மாற்று வேட்பாளரை அறிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  தனது ஜனாதிபதி வேட்பாளரை நாளை (07) காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

நாமல் ரக்கபக்ச போட்டியிட்டால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இளைய வேட்பாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply