எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்கள், வாக்காளர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட 12 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு வேட்பாளர் ஆகியோர் அடங்குவர்.
இரண்டு வேட்பாளர்கள் சார்பில் இன்று (08) பிணைப் பத்திரங்கள் வைக்கப்பட்டதுடன் இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். பண்டார மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர சிட்னி ஜயரத்ன ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.