முன்னாள் சுகாதார அமைச்சருக்கு விளக்கமறியல் நீடிப்பு! இருவருக்கு பிணை!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 03 சந்தேகநபர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply