12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவரையும், சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற பள்ளியின் பெண் துணை முதல்வர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மஹாவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 51 வயதுடைய ஆசிரியர் ஒருவரினால் மைனர் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி பாடசாலையின் பிரதி அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 49 வயதான பெண் பிரதி அதிபர், சம்பவம் தொடர்பில் மௌனமாக இருக்குமாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.