காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை யாழில்!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்று காலை யாழ். பிரதேச செயலகத்தில் மேற்கொண்டது.

யாழ்ப்பாணம், செங்கன்னூர், காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விசாரணைகள், நேற்று முன்தினம் உடுவில் பிரதேச செயலகத்திலும், நேற்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் நடைபெற்றிருந்தன.

அதனையடுத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெற்றன.

 

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply