பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) காலை உயிரிழந்துள்ளார்.
நாரம்மினிய வீதியில் களனி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக தனிநபர்கள் குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொட்டுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவர், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.