அண்மையில் சிறிபுர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெமுனுபுர, புல்லேயார் சந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டுபாயில் வசிக்கும் பாதாள பிரியந்த என அழைக்கப்படும் குணசிறி பிரியந்தவின் வழிகாட்டுதலின் பேரில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இலக்கு வைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 38, 40 மற்றும் 47 வயதுடைய வெலி ஓயா, பதவிய, கெபிதிகொல்லேவ மற்றும் பராக்கிரமபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.