இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் திகழ்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆவது ஜனன தின நிகழ்வு வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர் மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு நினைவுப் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.
ஓய்வு நிலை மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராசா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் தென்னிந்தியத் திருச்சபை ஆயர் அதி.வண. கலாநிதி வி.பத்மதயாளன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.