ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கான மானியம் குறித்து பெஃரல் அமைப்பு கவலை!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மானியங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை  கவலை வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த சலுகைகள் வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல என்று தெளிவுபடுத்தினார். பொது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த மானியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், அவசியமானால், தேர்தல் நடைமுறையில் நியாயமான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தலுக்குப் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply