தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
இந்த பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகர்ந்துள்ளது.
தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிற்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரச்சாரப் பயணம், வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரசாரப் பணிகளும் திட்டமிடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.