சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (23) வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போதே இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலாடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை  2024 ஆம் ஆண்டில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 45 இந்திய இழுவை படகுகளையும் 333 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றி, சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply