பேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக 4316 முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல்களுக்காக சமூக ஊடகங்களை, குறிப்பாக ஃபேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக கிட்டத்தட்ட 4316 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஃபேஸ்புக்கில் சட்டவிரோத பிரசாரங்களை மேற்கொண்ட 60 நபர்கள் மற்றும் பக்கங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், பொதுத் தேர்தல்களுக்கு ஃபேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தியதாக மொத்தம் 2000 முறைப்பாடுகள் ஏற்கனவே தேர்தலுக்கு முன்னர் பெறப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தல்கள் 2020க்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரையில் இடம்பெற்றது.

இந்நிலையில், தேர்தல் தினத்தன்று 143 தேர்தல் மீறல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir