கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,223 என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.