டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி!

யாழ்ப்பாணத்தில் 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த குறித்த மாணவி கொக்குவில், ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த போது விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரேதப்பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply