உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவருவேன்! ரணில்!

உடல் ரீதியிலான தண்டனையை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதேவேளை  அனைத்து வடிவங்களிலும் உடல் ரீதியான தண்டனையை தடைசெய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும்  குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் 20 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிகளுக்குப் பின்னர் இந்த மைல்கல் சாதனை கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  அரச வர்த்தமானியில் குறித்த மசோதா வெளியிடப்பட்டதும், இறுதி ஒப்புதலுக்காக  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், எனவும் அவர் தனது சமீபத்திய எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்!

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply