தேஷ்பந்து தென்னகோன் மீதான இடைக்கால உத்தரவை நீக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக  செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது.

வண. கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர், வண. பேராசிரியர் அகலகட சிரிசுமண தேரர் மற்றும் வண. பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல ஆகியோர் குறித்த இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தலையீட்டு மனு, நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த உத்தரவை அறிவித்த நீதிபதி பெஞ்ச் தலைவரான நீதியரசர் யசந்த கோதாகொட, இடைப்பட்ட மனுவில் உள்ள உள்ளடக்கம் வழக்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply