தமிழ் பொது வேட்பாளர் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து!

2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் பொதுகட்டமைப்பு சார்பில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கியிருக்கிறார்கள், அதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

பொதுவேட்பாளர் என்ற கருத்து 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டிய விடயமாகும். அந்த காலப்பகுதியில் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்றது.

அப்போது, பொதுவேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ள குறித்த 22 வேட்பாளர்களும் இருந்திருக்கின்றார்கள். அதில் சிலர் தற்போது இல்லை. மற்றும் சிலர் மறைந்து விட்டார்கள். இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு இப்படி ஒரு நடவடிக்கை முன்னெடுத்திருந்தால் நாங்கள் ஆதரவு வழங்கியிருப்போம் என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply