அனுரவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி நியமனம்!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 பொதுத் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவுக்குப் பிறகு மாவட்டத்திற்கான விருப்புப் பட்டியலில் அவர் அடுத்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply