பயணிகளின் பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து அவர்களிடம் இருந்து பொருட்களை திருடியதாக கூறப்படும் விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொதிகளை கையாளும் பிரிவில் பணிபுரியும் சந்தேக நபர், செப்டம்பர் 23 ஆம் திகதி மலேசியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வந்த விமானத்தின் பயணிகள் பொதிகள் சேமிப்பு பகுதிக்குள் ரகசியமாக நுழைந்ததாக கூறப்படுகிறது.

அவர் பயணிகளின் பொதிகளை திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கமரா காட்சிகளை அவதானித்த விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளில் இருந்து பொருட்கள் காணாமல் போனதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், அவர்களின் அவதானம் காரணமாக குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply