கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவர் 440 மில்லியன் ரூபா பெருமதியான 43 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய பயணி இன்று (26) காலை 9.15 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
மொத்தம் 43.648 கிலோ குஷ் கஞ்சா அவரது பயணப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டது.
விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.