மின்கட்டண குறைப்பு தொடர்பான ஆய்வு ஆரம்பம்! மின்சார சபை தெரிவிப்பு!

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், புதிய பாராளுமன்ற அமர்வின் பின்னரே ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் 06 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போதிலும்,  அது முறையாக மேற்கொள்ளப்படவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply