ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதித்தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் வீதித் தடைகளினால் முன்னர் மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் உயர் பாதுகாப்பு வலயமாக வகைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி திஸாநாயக்கவின் நியமனத்துடன், அனைத்து வீதித் தடைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாளை முதல் சர் பரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply