விசா கட்டண ரத்து தொடர்பான அமைச்சரவை முடிவு மீள நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!

39 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை ரத்து செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் கூடிய விரைவில் மீள அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை மீள அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரணியல் பயண அங்கீகார முறை இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் நாட்டிற்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் டொலர்கள்   இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பெர்னாண்டோ எடுத்துரைத்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply