ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் தஹாம் சிறிசேன தாயக மக்கள் கட்சியில் இணைவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர தலைமையிலான தாயக மக்கள்  இணைந்தனர்.

இன்று (03) கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் ​வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதுடன் தலைவர் திலித் ஜயவீரவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டார்.

தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளராகவும், தெதிகம தொகுதி அமைப்பாளராகவும் ராஜிகா விக்கிரமசிங்கவும், பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீரவும் கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்சில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply