பூசா சிறைச்சாலைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கையடக்கத் தொலைபேசியின் துணைக் கருவிகளைக் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரியின் சீருடையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியின் சார்ஜர் மற்றும் டேட்டா கேபிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.