குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஏ.ஆர். பிரேமரத்ன மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், பிரதி பொலிஸ்மா அதிபர் பி.ஹம்பாவில, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இடமாற்றங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.