அஜித் மான்னப்பெரும தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார்!

பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய சார்பில் போட்டியிட வேட்புமனுவை சமர்ப்பித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​சமகி ஜன பலவேகயவின் கம்பஹா தொகுதியின் பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான சமகிஜன பலவேகய பட்டியலில் நான் வேட்பாளராக உள்ளேன். கம்பஹா தொகுதியின் அமைப்பாளராகவும் 20 வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். எவ்வாறாயினும், நான் இம்முறை சமகிஜன பலவேகயவின் வேட்பாளராக வேட்புமனுவை சமர்ப்பித்த போதிலும், நான் வாக்குகளைக் கேட்பதைத் தவிர்க்க எண்ணினேன், ”என்று அவர் கூறினார்.

தாம் இனியும் சமகிஜன பலவேகய உடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை எனவும் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply