ரின்மீன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை!

நச்சுதன்மையுடைய ரின்மீன் தொகையை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றாடல், வனஜீவராசிகள், வனவள, நீர்வழங்கல், பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த ரின்மீன் தொகை 2021 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்தார்.

இந்த ரின்மீன் தொகை 215,000 டொலர் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் ஒரு கிலோகிராம் ரின்மீனில் ஆசனிக் அமிலமானது ஒரு கிராம் அல்லது அதற்கு குறைவான அளவில் காணப்பட வேண்டிய போதிலும் குறித்த ரின்மீன் தொகையில் 1.3 கிராம் அளவில் ஆசனிக் அமிலம் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் கூறினார்.

இதனால் மனித நுகர்வுக்கோ, விலங்குகளுக்கு உணவளிக்கவோ அதனை பயன்படுத்த முடியாதென  அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வௌிநாடுகளிலிருந்து நச்சு பொருட்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கும் அதனை மனித நுகர்வுக்கு பயன்படுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply