வியாழக்கிழமையன்று ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் தேசியப் பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வரப்போவதில்லையெனவும் அவர் முன்னரே தீர்மானித்திருந்தார்.

ஆயினும், பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயுச் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு அவர் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply