தவறான காதலால் தற்கொலை செய்த இளைஞன்!

அமெரிக்காவில் AI பெண் கதாப்பாத்திரத்துடன் காதல் வயப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் சில நிறுவனங்கள் அந்தரங்க உரையாடல்களுக்கும் ஏஐ சாட் பாட்களை உருவாக்கி வருகின்றன.

அவ்வாறாக ஒரு அமெரிக்க நிறுவனம் பிரபலமான கேம் ஆப் த்ரோன்ஸ் சீரிஸில் வரும் டெனேரியஸ் டார்கேரியன் கதாப்பாத்திரத்தை போன்ற ஒரு உரையாடல் சாட் பாட்டை தயாரித்துள்ளது.

குறித்த ஏஐ கதாபாத்திரத்துடன் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பயன்படுத்தி வந்துள்ளதோடு,கண்ணுக்கு தெரியாத அந்த ஏஐ மீது காதலில் விழுந்துள்ளான்.

இதனையடுத்து தனது கனவு காதலியை அடைய முடியாத நிலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply