இலங்கையின் சுற்றுலா பயணிகளின் வருகையில் பாதிப்பில்லை!

அறுகம்பே சுற்றுலா வலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வழமைக்கு மாறான எந்தக் குறைவும் இல்லையென்று பிரதேசவாசிகள் மற்றும் சுற்றுலா பணிகளில் ஈடுபடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பயண ஆலோசனையைத் தொடர்ந்து அப்பகுதியை விட்டு வெளியேறிய போதிலும், தற்போது விடுமுறை காலம் இருந்தபோதிலும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதாகவும் தற்போது இப்பகுதியில் விடுமுறை காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் ஹோட்டல் வசதிகள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் அப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply