பாடசாலை பரீட்சைகளில் அரசியல் கட்சி வினாக்கள் இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

பள்ளி பருவத் தேர்வுத் தாளில் அரசியல் தன்மை கொண்ட கேள்விகள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்தில் உடனடி விசாரணையை தொடங்குவதாக கல்வி அமைச்சகம்  அறிவித்துள்ளது.

கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை மாவட்ட சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணைப் பரீட்சையில் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதாரண பொதுப் பரீட்சையில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படுகிறது.

இந்த வினாத்தாள் சம்பந்தப்பட்ட பாடசாலையினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கும் தொடர்பில்லை எனவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply