சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள W.M.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான ரன்தேவ் தினேந்திர ஜோன் முன்வைத்த பிணைக் கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிணை கோரிக்கையானது சோபித ராஜகருணா மற்றும் மஹேன் கொபல்லாவ ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
3.5 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரியை(VAT) செலுத்தத் தவறியமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ரன்தேவ் தினேந்திர ஜோனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதிவாதியின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் குழாம், விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மனுவை எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டது.