பத்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று!

பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

மாலை 4 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே எழுபத்தொரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாகக் காணப்படுகிறது.

அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129  ​பேர் என  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில்லேயே குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மூன்று இலட்சத்து 6081 வாக்காளர்கள் அங்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2034 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதலாவது தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply