புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.
புதிய அமைச்சரவைப் பதவியேற்பானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று காலை 10 மணிமுதல் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் முதற் தொகுதி விபரங்கள்-
• பிரதமர் ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு
• விஜித ஹேரத் – வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை
• சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
• ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு
• சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
• லால் காந்த – கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்
• அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
• ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்