வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ஶ்ரீ.ரங்கா!

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருகை தந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சுமார்  100 மில்லியன் ரூபாய் பெருமதியான சொகுசு வாகனம்  சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை,  நவம்பர் 11 ஆம் திகதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை காவலில் எடுத்து அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தி அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply