சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
லங்கா சதொச மற்றும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ‘ஸ்வர்ண’ நாட்டு அரிசி ஒரு இருப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.