மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பதினாறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 16 வயது பள்ளிச் சிறுவன் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மண்ணுக்கு அடியில் சிக்கி பின்னர், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
எனினும் படுகாயமடைந்த குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.