அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹெங்கொடையில் வயோதிப தம்பதியொருவர் வீட்டினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வயதான தம்பதியினர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் அக்டோபர் 4ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேகநபர் அஹங்கம பொலிஸாரால் நேற்று (03) பிற்பகல் காலி கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 41 வயதுடைய உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.