
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – எல்பிட்டிய வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞன் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.