
குளியாப்பிட்டியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய – தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மேற்கு சியம்பலகஸ்ருப்ப , தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஆவார்.
இச் சம்பவம், நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் கொலைக்கான காரணம் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தும்மலசூரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.