வெலிகடை கைதிகளைப் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்ப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சிறைச் சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கைதிகளைப் பார்ப்பதற்கு அனு மதி மறுக்கப்பட்டதுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெலிகட சிறைச்சாலை நிர்வாகம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir