பம்பரகலையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து!

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பம்பரகலை மிடில் பிரிவில் லயன் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலை லிந்துலை பொலிஸ், தோட்ட பொதுமக்கள் அயல் தோட்ட இளைஞர்கள் இணைந்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத் தீ விபத்தில் லயன் குடியிருப்பு முற்றாக எறிந்த நிலையில் அதில் வசித்த 24 குடும்பங்களின் உடமைகளும் எறிந்து நாசமாகியுள்ளது

சம்பவம் அறிந்து அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் உடன் வருகை தந்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்துதருவதாக தெரிவித்தார்.

இத் தீ பரவலுக்கான காரணம் ஒரு வீட்டின் மின் ஒழுக்கில் ஏற்பட்ட கோலாரு என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir