வெலிகமவில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு- ஒருவர் பலி!

இன்று (4) அதிகாலை 1 மணியளவில் வள்ளிவெல வீதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரை இலக்கு வைத்து, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் ஐந்து பேரில், இரண்டு பேர் மட்டுமே சுடப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply