பஸ் ஒன்றின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நேற்றையதினம் பாணந்துறை பழைய பாலத்திற்கு அருகில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரின் கடமைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply