நாடாளுமன்றில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறிதரன்!

மலையக மக்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

மலையக மக்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களோகவே உள்ளனர். உலகவரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள். எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வில் மாற்றம் மிகவும் முக்கியமானது.

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். நலன்புரி தேவைப்படுவோருக்கு இன்றி வசதி படைத்தோருக்கு நலன்புரி
சென்றடைந்ததை காணமுடிகின்றது. தேவையுடையோர் பயனடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும்” என்று தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply