போதைப்பொருள் வர்த்தகத்தில் 2 வாரத்தில் 220 கோடி பணம் பரிமாற்றம்!

போதைபொருள் வரத்தகம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை,31 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்தமை தொடர்பில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரின் சகோதரி ஒருவர் கல்கிஸை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக 2 வங்கிகளில் இருந்த 5 கணக்குகளில் 31 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான குறித்த பெண், சிறைவைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரின் சகோதரி என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த 30 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பணம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir