அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ; சந்திரிக்கா திட்டவட்டம்

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து புதிய தலைவருடன் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து, ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சுதந்திரக் கட்சியின் முடிவையும் அவர் கண்டித்தார்.

அத்தோடு ராஜபக்ஷர்கள் பின்பற்றும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு நல்ல தலைவர் என்றும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.

ஒரு நல்ல தலைவர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் இப்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது என்றும் சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir